×

‘குப்பை இல்லா சென்னை’ என்ற பெயரில் சென்னை தினம் கொண்டாட்டம்: மாநகராட்சி திட்டம்

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி ‘சென்னை தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் சென்னை தினத்தைக் கொண்டாடும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரியில் உணவு வீதி, பாண்டிபஜார் ஆகிய இடங்களில் உணவுத் திருவிழா மற்றும் ஷாப்பிங் திருவிழா நடத்தப்பட உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், நாடகம், கட்டுரை, கவிதை மற்றும் கதை சொல்லும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டிகள் அனைத்தும் மாநகராட்சியை பசுமையாகவும், குப்பை இல்லாமலும் பாதுகாப்பதை சித்தரிக்கும் வகையில் இருக்க வேண்டும். இப்போட்டிக்கு 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாநகராட்சியின் டிவிட்டர் பக்கத்திற்கு சென்று க்யூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

The post ‘குப்பை இல்லா சென்னை’ என்ற பெயரில் சென்னை தினம் கொண்டாட்டம்: மாநகராட்சி திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai Day ,Litter Free Chennai ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...